தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14ஆம் தேதி முதல் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது புதுச்சேரி அரசு பொங்கல் பண்டிகை விடுமுறையை நீடித்துள்ளது. அதன்படி ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விடுமுறை என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு கட்டுவதற்கு ஏதுவாக பிப்ரவரி 1 மற்றும் 8ம் தேதி வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.