சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளார்.

அதாவது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய நிலையில் இதன் மீதான விவாதம் நாளை நடைபெற இருக்கிறது. மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.

இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி இனி பெண்களை பின்தொடர்ந்தால் 5 வருடங்கள் சிறை தண்டனையும், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 வருடங்கள் வரை சிறைதண்டனையும், ஆசிட் வீச்சு சம்பவத்திற்கு குறைந்தபட்சம் 10 வருடங்கள் சிறை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்பட உள்ளது.