பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் (68) உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். பாண்டி நாட்டுத் தங்கம், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய அவர், பிரியமுடன், பிதாமகன், பேரழகன், வில்லு. வேலாயுதம், சந்திரமுகி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம்பிடித்தவர். இவரின் காமெடியை ரசிக்காத ஆட்களே இருக்க முடியாது.