இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகியுள்ளார்.

 பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் சேத்தன் சர்மா. சேத்தன் சர்மா அனுப்பிய ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்று கொண்டுள்ளார். கங்குலி, கோலி உள்ளிட்டோர் குறித்து சேத்தன் சர்மா சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார். தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் இந்திய வீரர்கள் பற்றி சேத்தன் சர்மா சர்ச்சைக்குரிய நிலையில் கருத்து கூறியிருந்தார்.