தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசித்த அவர், தமிழக அரசின் திட்டங்களை பாராட்டியிருந்தார். எனினும் அந்த உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்து விட்டதாக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மேலும் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பேசும்போது பல வார்த்தைகளை தவிர்த்துவிட்டதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக திராவிட மாடல், பெரியார், காமராஜர், கலைஞர், அமைதிப்பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்துவிட்டார். இது குறித்து CM ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து கிளம்பிச் சென்றார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.