
விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி கணக்கு போடுகிறார். ஆனால் அவரின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார். அதிமுக வாக்குகளை தன்வசப்படுத்த தனித்து போட்டியிட தான் விஜய் விரும்புவார். பாஜகவுடன் அணி சேர்ந்தால் மட்டுமே அதிமுக கரை சேர முடியும் என ஓபிஎஸ் ஆதரவாளர் மருத அழகு ராஜ் கூறியுள்ளார்.