திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராஜினாமா செய்த நிலையில் நேற்று திமுக கட்சியின் சார்பில் புதிய வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கவுன்சிலரான கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இன்று மறைமுக தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இதனால் நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்க இருக்கிறார்.