கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்டுமான ஒப்பந்ததாரர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஜல்லிக் கற்கள், எம் சாண்ட் மற்றும் பி.சாண்ட் உள்ளிட்டவை கடந்த ஒரு மாதத்தில் 50 சதவீதம் உயர்ந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களும் அடங்குவர். இதனால் தமிழகத்தில் 2000 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என தெரிகிறது.