தமிழகத்தில் நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று பள்ளி கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 22 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 16 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 6மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், சிவகங்கை, தேனி  ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் ‌ இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு திருவாரூர், திருப்பூர் , நாகப்பட்டினம், நாமக்கல்  மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.