தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் முதல் கட்டமாக கோயில்காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 2ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்டு இன்று நடைபெறுகிறது.