தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடுதல் போன்ற போட்டிகளுக்கு எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் போலியானது. மேலும் சமூக வலைதளங்களில் போலியான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.