சென்னை வண்டலூர் அருகே திமுக பிரமுகர் ஆராமுதன் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஆராமுதன், அரசு பொது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். வெடிகுண்டு வீசியவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் முன்பகை காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது