அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வருமானவரித்துறை தாக்கலில் தெரிவித்ததை விட வங்கிக் கணக்கில் உள்ள பணம் மிக அதிகம்.

செந்தில் பாலாஜி வாங்கிக்கணக்கை ஆய்வு செய்ததில் 1.30 கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. செந்தில் பாலாஜி மனைவி மேகலா பெயரில் வங்கியின் 29.5 லட்சம் டெபாசிட் ஆகியிருக்கிறது. பலமுறை விசாரணை க்கு அழைத்தும் செந்தில் பாலாஜி வரவில்லை. காரணம் இல்லாமல் வாய்தா வாங்கினார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.