குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் கைவிரல் ரேகை சரிபார்ப்பை உடனே மேற்கொள்ளவும்; இல்லையென்றால் ரேஷன் அட்டை நீக்கப்படும் என மக்களை ரேஷன் கடை ஊழியர்கள் எச்சரிக்கின்றனர். தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இதுபோன்ற புகார்கள் எழுந்துள்ளது. ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படமாட்டாது என அரசு விளக்கமளித்துள்ள நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் இவ்வாறு கூறுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது