காட்பாடியில் 7 இடங்களில் உள்ள தங்கும் விடுதிகள், மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியாத்தம் நகரில் மொத்தம் 9 இடங்களில் உள்ள லாட்ஜ்களில் விபச்சாரம் நடந்து வருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபச்சாரம் நடக்கும் சில தங்கும் விடுதிகளை வேலூர் மாவட்ட அரசியல் பிரமுகர்கள் நடத்தி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட இடங்களில் அதிரடி ஆக்‌ஷனில் இறங்க டி.எஸ்.பி.க்களுக்கு வேலூர் மாவட்ட எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.