வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த பெஞ்சல் புயல் கரையை கடந்த போதிலும் புதுச்சேரியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்து மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்கள். தொடர்ந்து மீட்புப் பணிகள் என்பது நடைபெற்று வரும் நிலையில் தற்போது முதல்வர் ரங்கசாமி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ‌ரூ.5000 மழை  பாதிப்பின் காரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதன் பிறகு விவசாய நிலம் சேதத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெள்ளத்தில் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு 40,000 ரூபாயும் இளம் கன்று குட்டிக்கு 30000 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பின் 20,000 ரூபாயும் வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பின் 10,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.