ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார். இவர் பாஜக கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவர் பாஜக கட்சியில் பல்வேறு பணிகளில் பதவி வகித்து வந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்றுள்ளதால் பாஜகவின் அனைத்து பதவிகளில் இருந்தும் சிபி ராதாகிருஷ்ணன் விலகியுள்ளார். மேலும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சிபி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து அண்ணாமலை இடம் கொடுத்துள்ளார்.