ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகினார் சிபி ராதாகிருஷ்ணன்..

ஜார்கண்ட் மாநில ஆளுநராக அண்மையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய சி.பி இராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தொலைபேசி வாயிலாகவும், அதே போன்று குறுந்தகவல் மூலமாக வழங்கினர். இந்த சூழ்நிலையில்  ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக அவர்  இன்னும் சில நாட்களில் பதவி ஏற்க உள்ளார்.

பதவி ஏற்பதற்கு முன்னதாக தங்களது பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் விலக வேண்டும், அதுதான் நடைமுறையாக இருக்கிறது.. அதன் அடிப்படையில் அவர்  சென்னையில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருகை தந்தார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் கமலாலயத்தில் இருக்க கூடிய பாரதமாதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தமிழக பாஜகவை பொருத்தவரை சி.பி ராதாகிருஷ்ணன் மாநில மையக்குழு உறுப்பினராகவும், கேரள மாநில பாஜகவின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இப்படி பல்வேறு பொறுப்புகளை தற்போது வகித்து வரும் நிலையில் அந்த பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்போது அதிகாரப்பூர்வமாக விலகி உள்ளார்..

அதற்கான கடிதத்தை தான் மாநில தலைவர் அண்ணாமலையிடம் நேரடியாக வழங்கியுள்ளார். முன்னதாக பாஜக தலைமை அலுவலகம் வந்த ராதாகிருஷ்ணனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன்  பாஜக மேலிட இணைபொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஹெச். ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்பு வழங்கி உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பாராட்டு விழா என்பது தமிழக பாஜக சார்பில் நடத்தப்பட உள்ளது.. அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கிறது கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்..