டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது..

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சிங்கம் 3, பைரவா போன்ற படங்கள் பண்டிகை தினங்களில் வெளியான பொழுது திரையரங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அரசு மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கவில்லை என்று மனுவில் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்ததாகவும், அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, கட்டணத்தை விட 100 ரூபாய் வசூல் செய்ததாக தெரியவந்துள்ளது. அதற்காக சம்பந்தப்பட்ட திரையரங்குகளிடம் தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாகவும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவற்றை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டுள்ளது. அது போன்ற நடவடிக்கையை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அந்த கண்காணிப்பு நடவடிக்கை தொடர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர்..