கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் உயிரிழந்த நிலையில், அது பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடையது என விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 60+க்கும் மேற்பட்ட இடங்களிலும், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் என்னையே அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று திருவண்ணாமலையில் உள்ள நல்லவன் பாளையம் பகுதியில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் என்னை அதிகாரிகள் நடத்தும் சோதனையில் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.