மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா  ஏப்ரல் 12ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 22 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். இந்த நிகழ்வை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.