பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மற்றும் அதன் பின் தொடரும் எல்லைப் பதற்றங்களை முன்னிட்டு, இந்தியா பாதுகாப்பு நடவடிக்கையாக வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

இந்த முடிவு மே 9, 2025 முதல் மே 14, 2025 வரை (மே 15, காலை 5:29  வரை) அமலில் இருக்கும் என சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) வெளியிட்டுள்ள NOTAM அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மூடப்படும் விமான நிலையங்களின் பட்டியல்:

1, ஆதம்பூர்

2, அம்பாலா

3, அமிர்தசரஸ்

4, அவந்திபூர்

5, பதிண்டா

6,  புஜ்

7, பிகானீர்

8, சண்டிகர்

9, ஹல்வாரா

10, ஹிண்டன்

11, ஜம்மு

12, ஜெய்சால்மர்

13, ஜாம்நகர்

14, ஜோத்பூர்

15, கண்ட்லா

16, காங்க்ரா (காகல்)

17,  கெஷோத்

18, கிஷன்கர்

19, குலு மணாலி (பூந்தர்)

20, லே

21, லூதியானா

22, முந்த்ரா

23, நலியா

24, பதான்கோட்

25, பாட்டியாலா

26,  போர்பந்தர்

27,  ராஜ்கோட் (ஹிராசர்)

28,  சர்சாவா

29,  சிம்லா

30, ஸ்ரீநகர்

31, தோய்ஸ்

32, உத்தர்லை

இந்த முடிவு செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்டுள்ளதாக DGCA தெரிவித்துள்ளது. மேலும், விமான நிறுவனங்களுக்கு மாற்று வழித்தடங்களை திட்டமிடும் வகையில் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, பாகிஸ்தானின் தொடர்ச்சியான ட்ரோன் ஊடுருவல்கள், ஷெல் தாக்குதல்கள்  போன்ற தீவிர  மோதல்களுக்கிடையில் இந்தியாவின் விமானப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது.

விமான நிலையங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும், பொதுமக்கள் தேவையின்றி அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.