தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று சென்னைக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 4 மணி வரையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், தேனி, மயிலாடுதுறை, கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நாலையும் கனமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.