நெல்லையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தீபக் ராஜா கொலை போல முன் விரோத கொலைகள் என தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வந்த நிலையில் நேற்று இரவு மேலப்பாளையம் சையது தமீம் என்ற இளைஞரை மர்மகும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது.

அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது மாதிரியான சம்பவங்களுக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.