நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண் சான்று ரத்து செய்யப்பட்டு, திரும்பப் பெற வேண்டும். கருணை மதிப்பெண்கள் சேர்க்காமல் அவர்கள் பெற்ற அசல் மதிப்பெண்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறு தேர்வுக்கு வர மறுக்கும் மாணவர்களுக்கு அவர்களுடைய அசல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நீட் முடிவுகளை ரத்து செய்யக் கூடிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.