தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தலைவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இரண்டு பாகங்களாக படத்தை இயக்கினார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில், இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலான அகநக அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் 2 படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது படத்தில் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இசை குறித்த ஏ.ஆர் ரகுமானின் க்ளிம்ஸ் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் தொடர் அறிவிப்புகளால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.