தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இந்த படத்தை சசி இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை நடிகர் விஜய் ஆண்டனி அவரே இயக்கி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் சூட்டிங் மலேசியா உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு திடீரென விபத்து ஏற்பட்டதால் சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை முடிவடைந்த பிறகு மீண்டும் விஜய் ஆண்டனி படப்பிடிப்பு க்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி நேற்று தன்னுடைய டுட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த டிரைலர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/vijayantonyfilm/status/1624007922383740930?t=KQhLg_f4VVNvoVLNPeumWQ&s=19