டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனிடம் தமிழகத்தில் அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சியை எடுக்கும்படி பல விஷயங்களை பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனடிப்படையிலேயே ஜி.கே வாசன் எடப்பாடி பழனிச்சாமியை  சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.  தற்போது தமிழக அரசியலில் இது பேசு பொருளாகி உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  கழகப் பொதுச் செயலாளரை பொருத்தவரையில் ஏற்கனவே கூட்டணி குறித்து தெளிவுபடுத்தி விட்டார்.  பிஜேபியோடு இப்போதும் இல்லை…. எப்போதும் இல்லை….. இப்போதும் இல்லை…. எப்போதும் இல்லை இதை நோட் செய்து கொள்ளுங்கள்.  அவங்க அந்த கருத்து சொல்லலாமே ஒழிய இனிமே பிஜேபியோடு எந்த காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, இதுதான் கட்சியினுடைய நிலைப்பாடு.

இது தான் தெளிவான நிலைப்பாடு…. உறுதியான நிலைப்பாடு….  தொண்டர்கள் முதல் மக்கள்  முதற்கொண்டு எல்லோரும் வரவேற்கத்தக்க ஒரு முடிவை கட்சி எடுத்துள்ளது. பிஜேபி முயற்சி பண்ணுவது வீணான முயற்சி.  ADMK உடன் கூட்டணி வைக்க முடியற்சி எடுக்கிறார்களா ? இல்லையா ? என்று எனக்கு தெரியாது.   இது மாதிரி பல்வேறு கருத்துக்கள் பரப்பி விடப்படுகிறது.  இதெல்லாம் ஒரு வதந்தி தான். அதனால இதில் பாஜக முயற்சி எடுத்தாலும்,  அது வீணான முயற்சி தான். அதனால கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.  அதனால் அதுல உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.