அதிமுக கூட்டணி தொடர்பாக பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் அமித் ஷாவை அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் பாஜக மாநில தலைவர் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் வருகிற 7-ம் தேதி பாஜக தேசிய மையக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலை மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.