
பெங்களூரு மாநிலத்தில் கே. ஆர் புரம் பகுதியில் ஐடிஐ சாலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ பைரதி பசவராஜ் காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு போக்குவரத்து காவல்துறையினர் இல்லாத காரணத்தினால் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கிய எம்.எல்.ஏ காரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென காரை விட்டு இறங்கிய அவர் போக்குவரத்து நெரிசலான பகுதிக்கு சென்று ஒரு புறம் உள்ள வண்டிகளை வேகமாக அனுப்பியும், மறுபுறம் உள்ள வண்டிகளை நிறுத்தி சில மணி நேரத்திலேயே போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். பின்னர் எம்.எல்.ஏ காரில் ஏறி புறப்பட்டு சென்றார். பா.ஜ.க எம்.எல்.ஏ போக்குவரத்து நெரிசலை சரி செய்தது குறித்து அங்கு இருந்த வாகன ஓட்டிகள் பாராட்டினர்.