ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார்.

திமுக அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தவர், பாஜக கருத்துரிமையை பறிப்பதாக குற்றம் சாட்டினார். அதோடு இடைத்தேர்தலில் திமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இதில் உண்மை இருந்தால் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கட்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.