திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே உணவு என மாநிலங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. அதிக வரி செலுத்துகின்ற மாநிலத்திற்கு குறைந்த மக்களவைத் தொகுதி என்பதை ஒருபோதும்  போதும் நாம் ஏற்க முடியாது. 2014 முதல் 2023 வரை இந்த 9 ஆண்டுகளில் மாணவர்கள் இந்த கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசு 2014லிருந்து 2023 வரை ரூபாய் 5 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசுக்கு வரியாக,  நிதியாக கட்டி உள்ளது.  இந்த ஒன்பது ஆண்டுகளில் நாம் கொடுத்தது 5 லட்சம் கோடி. ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு திருப்பி கொடுத்தது, வெறும் 2 லட்சம் கோடி. ஆனால் 3 லட்சம் கோடி மட்டும் வரி கட்டிய,  உத்திரபிரதேசத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் 9  லட்சம் கோடி அளவிற்கு வரி பகிர்வு  வழங்கப்பட்டுள்ளது.

இந்த அநீதியை தான் நாம் ஒழிக்க வேண்டும் என்று நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். விளையாட்டு துறையிலும் இதே பாகுபாடு தொடர்கின்றது. குஜராத் மாநிலத்திற்கு சென்ற ஆண்டு விளையாட்டு மேம்பாட்டுக்காக நிதியாக  விளையாட்டு மேம்பாட்டு கட்டமைப்புகள்,  ஸ்டேடியம் இதெல்லாம் கட்டமைப்பதற்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?  608 கோடி ரூபாய்.  ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியது நிதி 38 கோடி ரூபாய்.

சமீபத்தில் நடந்த ஏசியன் கேம்ஸ் போட்டியில் குஜராத் விளையாட போட்டிகளில் எவ்வளவு பதக்கம் வாங்கினார்கள் தெரியுமா ? ஒரு பதக்கமும் வாங்கல. ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கிட்டத்தட்ட 28 பதக்கங்களை வென்று,  நமக்கெல்லாம் பெருமை சேர்த்திருக்கிறார்கள். கல்வி, சுகாதாரம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றது.