ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டில் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் 81 தொகுதிகளில் 30 தொகுதிகளை முக்தி மோர்ஷா கட்சி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 25 தொகுதிகளை பாஜகவும், 16 தொகுதிகளை காங்கிரசும் கைப்பற்றியிருந்தன. தற்போது நடந்த அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று  தேர்தலுக்கு பிந்தைய வெளிவந்த கருத்து கணிப்புகள் உள்ளிட்டவற்றால் பாஜக கலகத்தில் உள்ளது. இந்நிலையில் வர உள்ள தேர்தலில் வெற்றி கிடைக்குமா என பாஜக உள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

அதில் 18 வயதிற்கு மேலான மகளிருக்கு மாதம் ரூபாய் 2100 வழங்கும் திட்டம், ஒரு சிலிண்டர் ரூபாய் 500க்கு வழங்கப்படும் என்றும், பண்டிகை காலங்களில் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர்கள் எனவும், 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது. மேலும் போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூபாய் 2000 உதவித்தொகை, வீட்டை விற்றவர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக வழங்கியுள்ளது.