பிரபல விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி பிக் பாஸ் சீசன் 6 கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்னும் 3 நாட்களில் ஃபைனல் நடைபெற இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவர்கள்தான் வின்னர் மற்றும் ரன்னராக வருவார்கள் என்று பார்வையாளர்கள் பலரும் கூறுகிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டுள்ள நிலையில் முதலில் 3 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு கதிரவன் வீட்டை விட்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து தற்போது 13 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு அமுதவானனும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 13 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.