தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் போரில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த இஸ்ரேல் மக்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலும் தற்போது  தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து 7 மணி நேரத்துக்கும் மேலாககுண்டு  மழை பொழிந்து வருகிறது. இதில் பலரும் உயிரிழந்திருக்க  நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் எக்ஸ் பதிவு வாயிலாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாடு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மக்களின் குடும்பத்தினருக்கு தனந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் மத்தியில் இஸ்ரேல் உடைய அந்த போரானது பெரும் கவனம் பெற்று இருக்கிறது. இஸ்ரேல் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பு முன்பாக இஸ்ரேலில் ஊடுருவி தாக்குதலை நடத்திய நிலையில் தற்போது இஸ்ரேலானது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தான் இந்தியா இந்த போர் குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இது உலக வரலாற்றில் மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.