மதிமுக கட்சியில் இருந்து தற்போது எம்பி துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அதாவது மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகியுள்ளார். மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுடன் அண்மையில் துரை வைகோவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது.

இவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் வைகோ ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது துரை வைகோ கட்சி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் கட்சிப் பொறுத்திருந்து திடீரென அவர் விலகியது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.