
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக நிர்வாகி மகன் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் கடந்த 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திது. ஏற்கனவே இந்த கொலை வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் திருவள்ளுவர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ரவுடி திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.