மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியக் குடிமக்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மிக முக்கியமான அவசர கால அறிவுறுத்தலை (Advisory) வெளியிட்டுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்ணயித்த காலக்கெடு முடிவதற்கு முன்பே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முக்கிய இடங்கள் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு தாங்கள் இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாகத் தங்கியிருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
In view of the rapidly evolving situation in Iran, Indian nationals who are currently in Iran are advised to stay put where they are, shelter in place and avoid further movements. Any movement within Iran and to the border crossings of Iran may be considered only in close… pic.twitter.com/3xQ2y4FeBp
— ANI (@ANI) April 7, 2026
“>
“இன்று இரவு ஒரு முழு நாகரிகமே முடிவுக்கு வரக்கூடும்” என டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் எண்ணெய் வயல்கள் மற்றும் இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் மீது ஈரானும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதால், அங்குள்ள இந்தியர்கள் எந்நேரமும் இந்தியத் தூதரகத்தின் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
