தமிழகத்தில் மணல் கொள்ளை வழக்கில் ED முன்பு ஏப்ரல் 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதால் ஆட்சியர்கள் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் ஆட்சியர்கள் கட்டாயம் ஆஜராக வேண்டும் இல்லை என்றால் கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளது.