இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக செல்போன் அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தங்களுடைய செல் ஃபோன் எண் துண்டிக்கப்பட போவதாக வரும் போலி அழைப்புகள் குறித்து அச்சம் வேண்டாம் என்று தகவல் தொடர்பு அமைச்சக தொலைத் தொடர்பு துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அதேபோல வெளிநாட்டு எண்ணில் இருந்து வரும் வாட்ஸப் அழைப்புகள் குறித்தும். தொலைத்தொடர்பு துறை வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது இதுபோன்ற அழைப்புகள் மூலமாக இணையதளம் மோசடியாளர்கள் இணையதள குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளை செய்ய திட்டமிட முயற்சிக்க கூடும் என்று எச்சரித்துள்ளது.