ஸ்மார்ட் போன் உபயோகம் அதிகரிப்பதை போன்று மோசடிகளும் அதிகரித்து விட்டது. நம்மை அறியாமலேயே நன் போனில் சில செயலிகள் தானாக பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும். அந்த ஆப்ஸ் சில நேரங்களில் போனில் ஹிட்டன் செய்யப்பட்டிருக்கும். இதன் வாயிலாக பணமோசடி, தனி நபர் விபரங்கள் என பல மோசடி விஷயங்கள் நடைபெறும். உங்களது தொலைபேசியிலுள்ள ஹிட்டன் ஆப்ஸ் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள தொலைபேசியின் செட்டிங் பகுதிக்கு செல்ல வேண்டும்.

அதில் ஆப்ஸ் அண்ட் நோட்டிபிகேஷன் பகுதியில் நீங்க பயன்படுத்தக்கூடிய செயலிகளின் முழுமையான பட்டியல் இருக்கும். தற்போது See All Apps என்பதை தேர்வு செய்ய வேண்டும். இங்கே நீங்கள் Installed Apps, Disabled Apps, Hidden Apps என அனைத்து விருப்பங்களும் கொடுக்கப்பட்டு இருக்கும். பின் Disable apps என்பதற்குள் செல்ல வேண்டும். அடுத்ததாக உங்கள் மொபைலில் எந்தெந்த ஆப்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம். அப்போது நீங்கள் Installed செய்யப்படாத செயலிகள் ஏதாவது இருப்பின், அதநாய் உடனே டெலிட் செய்ய வேண்டும்.