
இறுதிப் போட்டியில் கோலிக்கு ‘பெஸ்ட் ஃபீல்டர் ஆஃப் தி மேட்ச்’ விருது வழங்கப்பட்டது.
2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார், அது சரியானது என்று நிரூபிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 240 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் வலுவான தொடக்கத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். முதல் 10 ஓவர்களில் இந்தியா 80 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால் ரோஹித் ஆட்டமிழந்த பிறகு இந்திய பேட்டிங் சிதறியது. விராட் கோலி 54 ரன்களும், கே.எல் ராகுல் 66 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 18 ரன்களும் எடுத்தனர். சிறிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் சிறப்பான சதம் அடித்தார். அவர் 137 ரன்களில் இன்னிங்ஸ் விளையாடி ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது அற்புதமான இன்னிங்ஸிற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 6வது முறை சாம்பியன் பட்டத்தை வென்றது..
உலக கோப்பை தொடர் முழுவதும் லீக் போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது, ஆனால் அந்த அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் கண்கலங்கி அழுதனர். மேலும் மற்ற வீரர்களும் சோகத்துடன் காணப்பட்டனர்.

இந்நிலையில் போட்டியின் பின்னர் வழக்கம்போல இந்தியாவின் சிறந்த பீல்டருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டிக்குப் பிறகு, வீரர்களின் உற்சாகம் முதல் ஆட்டத்தைப் போல் இல்லை. உலகக் கோப்பையை தவறவிட்ட வேதனை இந்திய வீரர்களின் முகத்தில் தெரிந்தது. ட்ரெஸ்ஸிங் ரூமில் அமைதி நிலவியது. முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி சிறந்த பீல்டர் என்ற பட்டத்தை வென்றார்.. ஜடேஜா சிறந்த பீல்டர் பதக்கத்தை கோலிக்கு வழங்கினார். புன்னகையுடன் கோலி வாங்கினார்.. ஆனால் கோலியின் புன்னகைக்கு பின்னால் ஏமாற்றம் இருந்தது என்பதும் உண்மை… ஜடேஜா வழங்கும்போது மற்ற வீரர்கள் கைதட்டி புன்னகையை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் உள்ளே கவலையுடன் இருப்பது அப்படியே தெரிகிறது.. இதற்கு முன் இந்த விருதை வாங்கியபோது கோலி, அதனை பல்லால் கடித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கலகலப்பாக இருந்தார். அப்போது அணி வீரர்கள் அனைவரும் சிரித்து மிகவும் உற்சாகமாக இருந்தனர். ஆனால் இந்தமுறை கோலியை ரசிகர்களால் இப்படி பார்க்கமுடியவில்லை.. ரசிகர்கள் இதனை பார்த்து கண்கலங்குகின்றனர்..
இந்தியாவின் வெற்றியை தடுத்து நிறுத்தியதன் மூலம் ஆஸ்திரேலியா உலகையே வென்று இந்தியர்களின் இதயங்களை உடைத்தது. ஆஸ்திரேலியாவின் தோல்விக்குப் பிறகு, இந்திய அணி பல்வேறு துறைகளைச் சேர்ந்த வீரர்களுடன் ரசிகர்களால் உற்சாகப்படுத்தப்படுகிறது. டிராவிஸ் ஹெட் சதம் அடித்து தனது அணியை ஆறாவது உலக பட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
From our first medal ceremony to the last – thank you to all the fans who've given us a lot of love for it 💙
Yesterday, we kept our spirits high in the dressing room and presented the best fielder award for one final time.
Watch 🎥🔽 – By @28anand#TeamIndia | #CWC23
— BCCI (@BCCI) November 20, 2023
Virat Kohli won the 'best fielder of the match' against Australia in #CWC2023Final 🏅#TeamIndia #INDvsAUS #ViratKohli #CricketTwitter pic.twitter.com/F6uZgo5q6O
— InsideSport (@InsideSportIND) November 20, 2023
https://twitter.com/roselacentt/status/1711235715265364117