
பெங்களூருவை உலுக்கிய மகாலட்சுமி கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் சக ஊழியரான முக்திரஞ்சன் ராய், தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக போலீசார், முக்திரஞ்சன் ஒடிசாவின் பத்ரக்கில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்றபோது, அவரது உடல் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மகாலட்சுமியை 50 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொன்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த புதிய திருப்பத்தின் மூலம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.