இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதேபோன்று ஏமாற்றுபவர்களும் டிஜிட்டல் மையமாக ஏமாற்றுகிறார்கள். அதிலும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அதிகமாக ஏமாறுகிறார்கள்.

குறிப்பிட்ட லிங்கை தவறுதலாக தொடுவதன் மூலமாகவோ அல்லது வங்கியில் இருந்து அழைக்கிறோம் என்று போலியான அழைப்பு மூலமாகவோ சிலர் ஏமாந்து இருக்கலாம்.

அதே போன்று தங்கள் ஸ்மார்ட் ஃபோனுக்கு வரும் மெசேஜ் கால் போன்றவைகளை பிறர் பார்வேர்ட் செய்வதன் மூலமாகவும் ஏமாற்றப்படலாம்.

மெசேஜ், கால் எப்படி ஃபார்வேர்ட் ஆகும்?

பொது இடத்தில் இருக்கும் போது முன்பின் தெரியாத நபர் ஒருவர் வந்து ஒரு போன் பண்ண வேண்டும் என்று உங்கள் ஸ்மார்ட் ஃபோனை கேட்பார்கள்.

சிலர் யோசிக்காமல் கொடுத்து விட்டால் அந்த ஃபோனில் இருந்து *401* என்ற நம்பருடன் அந்த நபர் அவருடைய நம்பரையும் போட்டு கால் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் கால் மெசேஜ் அனைத்தும் அந்த நபருடைய நம்பருக்கு ஃபார்வேர்ட் ஆகும்.

ஏற்படும் இழப்பு என்ன?

இப்படி கால் மெசேஜ் ஃபார்வேர்ட் செய்யப்படுவதால் வங்கியில் இருந்து உங்களுக்கு வரப்படும் ஓடிபி முதற்கொண்டு அந்த நபருக்கு சென்று விடும். இதனால் எளிதில் அவர்கள் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியும்.

தடுப்பது எப்படி?

உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து *#21# என்ற எண்ணுக்கு டயல் செய்தால் கால் மெசேஜ் போன்றவை ஃபார்வேர்ட் செய்யப்படுகிறதா என்று தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு வேலை பார்வேர்ட் செய்யப்படுவதாக இருந்தால் ##002# என்ற எண்ணை அழைத்து பார்வேர்ட் செய்யப்படுவதை நிறுத்திக் கொள்ளலாம்.