சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷாண்டோ 77 ரன்கள் வரை எடுத்தார். நியூசிலாந்து அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வரை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணிகள் ரச்சின் ரவீந்தரா 112 ரன்கள் எடுத்த நிலையில் டாம் லாதம் 55 ரன்கள் வரை எடுத்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 46‌.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில் இந்திய அணியும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் ரச்சின் சதம் அடித்த நிலையில் உலகக்கோப்பை அறிமுக பேட்டியிலேயே சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதன் பிறகு ஒருநாள் போட்டிகளில் நான்காவது சதத்தை பூர்த்தி செய்து அதிக சதம் விளாசிய நியூசிலாந்து வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த வில்லியம்சனை பின்னுக்கு தள்ளி ரச்சின் முதல் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.