சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷாண்டோ 77 ரன்கள் வரை எடுத்தார். நியூசிலாந்து அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வரை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்தரா 112 ரன்கள் எடுத்த நிலையில் டாம் லாதம் 55 ரன்கள் வரை எடுத்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 46‌.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில் இந்திய அணியும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.