2022 ஆம் ஆண்டிற்கான ICC-யின் சிறந்த ஒரு நாள் ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, சிறந்த டி20 அணி, சிறந்த டெஸ்ட் அணி என பல்வேறு விருதுகளை வழங்கி வருகின்றது. இதே போல் ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர்களை கொண்ட ஒரு நாள் டி20 டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவிக்கும். அந்த வகையில் ஐசிசி 2022 ஆம் ஆண்டிற்கான ஆடவர்கள் டி20 அணி, பெண்கள் டி20 அணியை அறிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் ஆடவர் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இந்திய அணியில் இருந்து ஒரு பேட்ஸ்மேன், ஒரு பந்துவீச்சாளர் என இரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் இந்தியா வீரர் ஷ்ரேயஸ் ஐயர், முகமது சிராஜ் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி ஒருநாள் அணி 2022 :

பாபர் அசாம் (கேப்டன்) பாகிஸ்தான், டிராவிஸ் ஹெட் – ஆஸ்திரேலியா, ஷாய் ஹோப் – வெஸ்ட் இண்டீஸ், ஷ்ரேயாஸ் ஐயர் – இந்தியா, டாம் லாதம் (விக்கெட் கீப்பர்) – நியூசிலாந்து, சிக்கந்தர் ராசா – ஜிம்பாப்வே, மெஹ்தி ஹசன் மிராஜ் – வங்கதேசம், அல்சாரி ஜோசப் – வெஸ்ட் இண்டீஸ், முகமது சிராஜ் – இந்தியா, டிரென்ட் போல்ட் – நியூசிலாந்து, ஆடம் ஜம்பா – ஆஸ்திரேலியா.