தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று திருப்பரங்குன்றத்திலுள்ள பசுமலை பகுதியில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கட்சி தொண்டர்கள் மதிய உணவு வழங்கினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது “திமுக அமைச்சரவையிலுள்ள நிதியமைச்சரே 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என ஆடியோ வாயிலாக குறிப்பிட்டுள்ளது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்றார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோவால் அவரின் அமைச்சர் இலாகா மாற்றப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஆர்.பி உதயகுமார் பதிலளித்ததாவது, எப்படி பேபி சக்ரமில் மீனா அவர்களின் ஆடியோ இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோ அதுபோல் இவரின் ஆடியோவும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. இதனை திசை திருப்புவதற்காகவே அமைச்சர் பதவியில் மாற்றம் செய்துள்ளனர். இது தமிழ்நாடு மக்கள் மத்தியில் எந்த ஒரு நற்பெயரையும் ஏற்படுத்தாது. முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பேசியதும், ஆனால் தற்போது ஆளுங்கட்சியான பிறகு செய்வதும் முன்னுக்கு முரணாக உள்ளது என்று ஆர்.பி உதயகுமார் கூறினார்.