பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உங்களது வங்கி கணக்கில் போதுமான பணமில்லை என்ற சூழலில், ATM-ல் இருந்து பணம் எடுக்க முயற்சித்தால் கணக்கில் குறைந்த இருப்பு காரணமாக பரிவர்த்தனை தோல்வியடைந்த அந்த வங்கி உங்களுக்கு 10 ரூபாயும், அதன் ஜிஎஸ்டியையும் சேர்த்து அபராதமாக விதிக்கும். இந்த புது விதி வரும் மே 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

இத்தகவலை பஞ்சாப் நேஷனல் வங்கி தன் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. அதாவது “வாடிக்கையாளரே 2023-ம் வருடம் மே 1ம் தேதி முதல் போதுமான நிதி இல்லாததால் உள்நாட்டு ATM பரிவர்த்தனைகளில் இருந்து பணம் எடுக்க தவறினால் ரூ.10 +ஜிஎஸ்டி செலுத்தவேண்டும் என்று வங்கி தன் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளது.