இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த மாநில அரசுகள் வகுத்துள்ளன. அதன்படி தற்போது பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் போன்ற உடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு அலுவலகங்களின் பணி கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஊழியர்களை எளிதாக அடையாளம் காண இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த உத்தரவின்படி ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு சாதாரண உடலில் வரவேண்டும் எனவும் பணி நேரத்தில் தங்களின் அடையாள அட்டையை கட்டாயம் கழுத்தில் அணிந்து இருக்க வேண்டும் எனவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.